Skip to main content

ஸூரத்துந் நூர் வசனம் ௨௨

وَلَا يَأْتَلِ اُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْٓا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۖوَلْيَعْفُوْا وَلْيَصْفَحُوْاۗ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ  ( النور: ٢٢ )

And not let swear
وَلَا يَأْتَلِ
சத்தியம் செய்ய வேண்டாம்
those of virtue those of virtue
أُو۟لُوا۟ ٱلْفَضْلِ
செல்வம் உடையவர்கள்
among you
مِنكُمْ
உங்களில்
and the amplitude of means
وَٱلسَّعَةِ
இன்னும் வசதி
that they give
أَن يُؤْتُوٓا۟
அவர்கள் கொடுக்க
(to) the near of kin (to) the near of kin
أُو۟لِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
and the needy
وَٱلْمَسَٰكِينَ
இன்னும் வறியவர்களுக்கு
and the emigrants
وَٱلْمُهَٰجِرِينَ
இன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்கு
in (the) way
فِى سَبِيلِ
பாதையில்
(of) Allah
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
And let them pardon
وَلْيَعْفُوا۟
அவர்கள் மன்னிக்கட்டும்
and let them overlook
وَلْيَصْفَحُوٓا۟ۗ
பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும்
(Do) not you like
أَلَا تُحِبُّونَ
விரும்ப மாட்டீர்களா?
that Allah should forgive
أَن يَغْفِرَ
மன்னிப்பதை
Allah should forgive
ٱللَّهُ
அல்லாஹ்
you?
لَكُمْۗ
உங்களை
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
மகா கருணையுடையவன்

Wa laa yaatali ulul fadli minkum wassa'ati ai yu'tooo ulil qurbaa walmasaakeena walmuhaajireena fee sabeelillaahi walya'foo walyasfahoo; alaa tuhibboona ai yaghfiral laahu lakum; wal laahu Ghafoorur Raheem (an-Nūr 24:22)

Abdul Hameed Baqavi:

உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And let not those of virtue among you and wealth swear not to give [aid] to their relatives and the needy and the emigrants for the cause of Allah, and let them pardon and overlook. Would you not like that Allah should forgive you? And Allah is Forgiving and Merciful. ([24] An-Nur : 22)

1 Jan Trust Foundation

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.