Skip to main content

وَإِذَا رَأَوْكَ
அவர்கள் உம்மைப் பார்த்தால்
إِن يَتَّخِذُونَكَ
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
إِلَّا
தவிர
هُزُوًا
கேலியாகவே
أَهَٰذَا
இவரையா?
ٱلَّذِى
எவர்
بَعَثَ
அனுப்பினான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَسُولًا
தூதராக

Wa izaa ra awka iny yattakhizoonaka illaa huzuwan ahaazal lazee ba'asal laahu Rasoolaa

(நபியே!) இவர்கள் உங்களைக் கண்டால் உங்களைப் பற்றி "இவரையா அல்லாஹ் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்?" என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்.

Tafseer

إِن كَادَ
இவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்
عَنْ ءَالِهَتِنَا
நமது தெய்வங்களை விட்டு
لَوْلَآ أَن
நாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்
عَلَيْهَاۚ
அவற்றின் மீது
وَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொள்வார்கள்
حِينَ
போது
يَرَوْنَ
அவர்கள் பார்க்கும்
ٱلْعَذَابَ
தண்டனையை
مَنْ
யார்
أَضَلُّ
மிக வழிகெட்டவர்
سَبِيلًا
பாதையால்

In kaada la yudillunaa 'an aalihatinaa law laaa an sabarnaa 'alaihaa; wa sawfa ya'lamoona heena yarawnal 'azaaba man adallu sabeela

(அன்றி) "நாம் உறுதியாக இல்லையென்றால், நம்முடைய தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்" (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.

Tafseer

أَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
مَنِ ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டவனை
إِلَٰهَهُۥ
தனது கடவுளாக
هَوَىٰهُ
தனது மன இச்சையை
أَفَأَنتَ
நீர்?
تَكُونُ
ஆகுவீரா
عَلَيْهِ
அவனுக்கு
وَكِيلًا
பொறுப்பாளராக

Ara'aita manit takhaza ilaahahoo hawaahu afa anta takoonu 'alaihi wakeelaa

(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன்னுடைய தெய்வமாக எடுத்துக்கொண்டானோ அவனை நீங்கள் பார்த்தீர்களா? (அவன் வழி தவறாது) நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீர்களா?

Tafseer

أَمْ
அல்லது
تَحْسَبُ
நீர் எண்ணுகிறீரா?
أَنَّ
என்று
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
يَسْمَعُونَ
செவிமடுப்பார்கள்
أَوْ
அல்லது
يَعْقِلُونَۚ
சிந்தித்து புரிவார்கள்
إِنْ هُمْ
அவர்கள் இல்லை
إِلَّا
தவிர
كَٱلْأَنْعَٰمِۖ
கால்நடைகளைப் போன்றே
بَلْ
மாறாக
هُمْ
அவர்கள்
أَضَلُّ
வழிகெட்டவர்கள்
سَبِيلًا
பாதையால்

Am tahsabu annna aksarahum yasma'oona aw ya''qiloon; in hum illaa kal an'aami bal hum adallu sabeelan

அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களுடைய வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதனை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கின்றார்களென்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே அன்றி வேறில்லை. பின்னும், (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَىٰ
பக்கம்
رَبِّكَ
உமது இறைவன்
كَيْفَ
எப்படி
مَدَّ
நீட்டுகிறான்
ٱلظِّلَّ
நிழலை
وَلَوْ شَآءَ
அவன் நாடியிருந்தால்
لَجَعَلَهُۥ
அதை ஆக்கியிருப்பான்
سَاكِنًا
நிரந்தரமாக
ثُمَّ
பிறகு
جَعَلْنَا
நாம் ஆக்கினோம்
ٱلشَّمْسَ
சூரியனை
عَلَيْهِ
அதன் மீது
دَلِيلًا
ஆதாரமாக

Alam tara ilaa Rabbika kaifa maddaz zilla wa law shaaa'a laja'alahoo saakinan summa ja'alnash shamsa 'alaihe daleelaa

(நபியே!) உங்கள் இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவன் நாடியிருந்தால், அதனை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
قَبَضْنَٰهُ
அதை கைப்பற்றி விடுகிறோம்
إِلَيْنَا
நம் பக்கம்
قَبْضًا
கைப்பற்றுதல்
يَسِيرًا
மறைவாக

Summa qabadnaahu ilainaa qabdany yaseeraa

பின்னர் நாம்தான் அதனை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகின்றோம்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
جَعَلَ
ஆக்கினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلَّيْلَ
இரவை
لِبَاسًا
ஓர் ஆடையாகவும்
وَٱلنَّوْمَ
இன்னும் தூக்கத்தை
سُبَاتًا
ஓய்வாகவும்
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
ٱلنَّهَارَ
பகலை
نُشُورًا
விழிப்பதற்கும்

Wa Huwal lazee ja'ala lakumul laila libaasanw wannawma subaatanw wa ja'alan nahaara nushooraa

அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَرْسَلَ
அனுப்புகிறான்
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
بُشْرًۢا
நற்செய்தி கூறக்கூடியதாக
بَيْنَ يَدَىْ
முன்பாக
رَحْمَتِهِۦۚ
தன் அருளுக்கு
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்குகிறோம்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழை நீரை
طَهُورًا
பரிசுத்தமான

Wa Huwal lazeee arsalar riyaaha bushram baina yadai rahmatih; wa anzalnaa minas samaaa'i maaa'an tahooraa

அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கின்றான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கின்றோம்.

Tafseer

لِّنُحْۦِىَ
நாம் உயிர்ப்பிப்பதற்காகவும்
بِهِۦ
அதன்மூலம்
بَلْدَةً
பூமியை
مَّيْتًا
இறந்த
وَنُسْقِيَهُۥ
இன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும்
مِمَّا خَلَقْنَآ
நாம் படைத்தவற்றில்
أَنْعَٰمًا
பல கால்நடைகளுக்கும்
وَأَنَاسِىَّ
இன்னும் மனிதர்களுக்கும்
كَثِيرًا
அதிகமான

Linuhyiya bihee balda tam maitanw wa nusqiyahoo mimmaa khalaqnaaa an'aa manw wa anaasiyya kaseeraa

அதனைக்கொண்டு இறந்த பூமிக்கு நாம் உயிர் கொடுத்து நம்முடைய படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதனைப் புகட்டுகின்றோம்.

Tafseer

وَلَقَدْ صَرَّفْنَٰهُ
அதை நாம் பிரித்துக் கொடுத்தோம்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
لِيَذَّكَّرُوا۟
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
فَأَبَىٰٓ
மறுத்து விட்டனர்
أَكْثَرُ
மிகஅதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மனிதர்களில்
إِلَّا
தவிர
كُفُورًا
நிராகரிப்பதை

Wa laqad sarrafnaahu bainahum li yazzakkaroo fa abaaa aksarun naasi illaa kufooraa

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.

Tafseer