Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
ٱتَّقِ
பயந்துகொள்ளுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلَا تُطِعِ
கீழ்ப்படியாதீர்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கும்
وَٱلْمُنَٰفِقِينَۗ
நயவஞ்சகர்களுக்கும்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Yaa aiyuhan Nabiyyut taqil laaha wa laa tuti'il kaafireena wal munaafiqeen; innal laaha kaana 'aleeman Hakeemaa

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகருக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱتَّبِعْ
இன்னும் பின்பற்றுவீராக
مَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதை
إِلَيْكَ
உமக்கு
مِن رَّبِّكَۚ
உமது இறைவனிடமிருந்து
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Wattabi' maa yoohaaa ilaika mir Rabbik; innal laaha kaana bimaa ta'maloona Khabeera

உங்களது இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَتَوَكَّلْ
இன்னும் சார்ந்திருப்பீராக!
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வை
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
وَكِيلًا
பொறுப்பாளனாக இருக்க

Wa tawakkal 'alal laah; wa kafaa billaahi Wakeelaa

(நபியே!) நீங்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள போதுமானவன்.

Tafseer

مَّا جَعَلَ
அமைக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِرَجُلٍ
ஒரு மனிதனுக்கு
مِّن قَلْبَيْنِ
இரு உள்ளங்களை
فِى جَوْفِهِۦۚ
அவனது உடலில்
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
أَزْوَٰجَكُمُ
உங்கள்மனைவிகளை
ٱلَّٰٓـِٔى
எவர்கள்
تُظَٰهِرُونَ
ளிஹார்செய்கின்றீர்கள்
مِنْهُنَّ
அவர்களில்
أُمَّهَٰتِكُمْۚ
உங்கள் தாய்மார்களாக
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
أَدْعِيَآءَكُمْ
வளர்ப்புபிள்ளைகளை உங்கள்
أَبْنَآءَكُمْۚ
உங்கள் பிள்ளைகளாக
ذَٰلِكُمْ
அது
قَوْلُكُم
நீங்கள் கூறுவதாகும்
بِأَفْوَٰهِكُمْۖ
உங்கள் வாய்களால்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَقُولُ
கூறுகின்றான்
ٱلْحَقَّ
உண்மையை
وَهُوَ
அவன்தான்
يَهْدِى
வழிகாட்டுகின்றான்
ٱلسَّبِيلَ
நல்ல பாதைக்கு

Maa ja'alal laahu lirajulim min qalbaini fee jawfih; wa maa ja'ala azwaajakumul laaa'ee tuzaahiroona minhunna ummahaatikum; wa maa ja'ala ad'iyaaa'akum abnaaa'akum; zaalikum qawlukum bi afwaa hikum wallaahu yaqoolul haqqa wa Huwa yahdis sabeel

எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்களுடைய (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்களுடைய பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே. (அன்றி உண்மையல்ல.) அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.

Tafseer

ٱدْعُوهُمْ
அழையுங்கள்! அவர்களை
لِءَابَآئِهِمْ
அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே)
هُوَ
அதுதான்
أَقْسَطُ
மிக நீதமானது
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
فَإِن لَّمْ
நீங்கள் அறியவில்லை என்றால்
ءَابَآءَهُمْ
தந்தைகளை அவர்களின்
فَإِخْوَٰنُكُمْ
உங்கள் சகோதரர்கள்
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
وَمَوَٰلِيكُمْۚ
இன்னும் உங்கள் உதவியாளர்கள்
وَلَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
فِيمَآ
எதில்
أَخْطَأْتُم
நீங்கள் தவறு செய்தீர்களோ
بِهِۦ
அதில்
وَلَٰكِن
என்றாலும்
مَّا
எதை
تَعَمَّدَتْ
வேண்டுமென்று செய்தது
قُلُوبُكُمْۚ
உங்கள் உள்ளங்கள்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
மகா கருணையாளனாக

Ud'oohum li aabaaa'ihim huwa aqsatu 'indal laah; fa illam ta'lamooo aabaaa'ahum fa ikhwaanukum fid deeni wa mawaaleekum; wa laisa 'alaikum junaahun feemaaa akhtaatum bihee wa laakim maa ta'ammadat quloobukum; wa kaanal laahu Ghafoorar Raheemaa

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது சிநேகிதரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. எனினும், (இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலோ (அது உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱلنَّبِىُّ
நபிதான்
أَوْلَىٰ
மிக உரிமையாளர்
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
مِنْ أَنفُسِهِمْۖ
அவர்களின் ஆன்மாக்களைவிட
وَأَزْوَٰجُهُۥٓ
இன்னும் அவருடைய மனைவிமார்கள்
أُمَّهَٰتُهُمْۗ
அவர்களுக்கு தாய்மார்கள்
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
இன்னும் இரத்தபந்தங்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلَىٰ
உரிமையுள்ளவர்கள்
بِبَعْضٍ
சிலருக்கு
فِى كِتَٰبِ
வேதத்தின் படி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை(யும்) விட
وَٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்களையும்
إِلَّآ
தவிர
أَن تَفْعَلُوٓا۟
நீங்கள்ஏதும்செய்தால்
إِلَىٰٓ أَوْلِيَآئِكُم
உங்கள் பொறுப்பாளர்களுக்கு
مَّعْرُوفًاۚ
ஒரு நன்மையை
كَانَ
இருக்கின்றது
ذَٰلِكَ
இது
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
مَسْطُورًا
எழுதப்பட்டதாக

An-Nabiyyu awlaa bil mu'mineena min anfusihim wa azwaajuhoo ummahatuhum wa ulul arbaami ba'duhum awlaa biba'din fee Kitaabil laahi minal mu'meneena wal Muhaajireena illaaa an taf'alooo ilaaa awliyaaa'ikum ma'roofaa; kaana zaalika fil kitaabi mastooraa

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தாம் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் சிநேகிதர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக் கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Tafseer

وَإِذْ أَخَذْنَا
நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக
مِنَ ٱلنَّبِيِّۦنَ
எல்லா நபிமார்களிடமும்
مِيثَٰقَهُمْ
அவர்களின் ஒப்பந்தத்தை
وَمِنكَ
உம்மிடமும்
وَمِن نُّوحٍ
இன்னும் நூஹிடம்
وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீம்
وَمُوسَىٰ وَعِيسَى
இன்னும் மூஸா/இன்னும் ஈஸா
ٱبْنِ
மகன்
مَرْيَمَۖ
மர்யமின்
وَأَخَذْنَا
இன்னும் நாம் வாங்கினோம்
مِنْهُم
அவர்களிடம்
مِّيثَٰقًا
ஒப்பந்தத்தை
غَلِيظًا
உறுதியான

Wa iz akhaznaa minan Nabiyyeena meesaaqahum wa minka wa min Noohinw wa Ibraaheema wa Moosaa wa Eesab-ni-Maryama wa akhaznaa minhum meesaaqan ghaleezaa

(நபியே! நம்முடைய தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உங்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கிய சமயத்தில், மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் (என்பதை இவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்).

Tafseer

لِّيَسْـَٔلَ
விசாரிப்பதற்காக
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களை
عَن صِدْقِهِمْۚ
அவர்களின் உண்மையைப் பற்றி
وَأَعَدَّ
ஏற்படுத்திஇருக்கிறான்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابًا
தண்டனையை
أَلِيمًا
வலிமிகுந்த(து)

Liyas'alas saadiqeena 'an sidqihim; wa a'adda lilkaa fireena 'azaaban aleemaa

ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (இறைவன்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱذْكُرُوا۟
நினைத்துப் பாருங்கள்
نِعْمَةَ
அருட்கொடையை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீதுள்ள
إِذْ جَآءَتْكُمْ
உங்களிடம்வந்தபோது
جُنُودٌ
பல ராணுவங்கள்
فَأَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
رِيحًا
காற்றை(யும்)
وَجُنُودًا
ராணுவங்களையும்
لَّمْ تَرَوْهَاۚ
நீங்கள் பார்க்கவில்லை/ அவர்களை
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرًا
உற்று நோக்கியவனாக

Yaaa aiyuhal lazeena aamanuz kuroo ni'matal laahi 'alaikum iz jaaa'atkm junoodun fa arsalnaa 'alaihim reehanw wa junoodal lam tarawhaa; wa kaanal laahu bimaa ta'maloona Baseera

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருந்தான்.

Tafseer

إِذْ
அவர்கள் வந்த சமயத்தில்
جَآءُوكُم
உங்களிடம்
مِّن فَوْقِكُمْ
உங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்)
وَمِنْ أَسْفَلَ
கீழ்ப்புறத்திலிருந்தும்
مِنكُمْ
உங்களுக்கு
وَإِذْ
இன்னும் சமயத்தில்
زَاغَتِ
சொருகின
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
وَبَلَغَتِ
இன்னும் எட்டின
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்
ٱلْحَنَاجِرَ
தொண்டைகளுக்கு
وَتَظُنُّونَ
நீங்கள் எண்ணினீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ٱلظُّنُونَا۠
பல எண்ணங்களை

Iz jaaa'ookum min fawqikum wa min asfala minkum wa iz zaaghatil absaaru wa balaghatil quloobul hanaajira wa tazunnoona billaahiz zunoonaa

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அஹ்ஜாப
القرآن الكريم:الأحزاب
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Ahzab
ஸூரா:33
வசனம்:73
Total Words:1280
Total Characters:5790
Number of Rukūʿs:9
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:90
Starting from verse:3533