Skip to main content

يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் சந்ததிகளே
خُذُوا۟ زِينَتَكُمْ
அலங்கரித்துக் கொள்ளுங்கள்/உங்களை
عِندَ كُلِّ
இடம்/எல்லாம்
مَسْجِدٍ
மஸ்ஜிது
وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
وَلَا تُسْرِفُوٓا۟ۚ
விரயம் செய்யாதீர்கள்
إِنَّهُۥ
நிச்சயம் அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُسْرِفِينَ
விரயம் செய்பவர்களை

Yaa Banneee Adama khuzoo zeenatakum 'inda kulli masjidinw wa kuloo washraboo wa laa tusrifoo; innahoo laa yuhibbul musrifeen

ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

قُلْ مَنْ
கூறுவீராக/எவன்?
حَرَّمَ
தடை செய்தான்
زِينَةَ
அலங்காரத்தை
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلَّتِىٓ
எது
أَخْرَجَ
வெளிப்படுத்தினான்
لِعِبَادِهِۦ
தன் அடியார்களுக்காக
وَٱلطَّيِّبَٰتِ
இன்னும் நல்லவற்றை
مِنَ ٱلرِّزْقِۚ
உணவில்
قُلْ
கூறுவீராக
هِىَ
அது
لِلَّذِينَ
எவர்களுக்கு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
خَالِصَةً
பிரத்தியோகமாக
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
كَذَٰلِكَ
இவ்வாறு
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்

Qul man harrama zeenatal laahil lateee akhraja li'ibaadihee wattaiyibaati minar rizq; qul hiya lillazeena aamanoo fil hayaatid dunyaa khaalisatany Yawmal Qiyaamah; kazaalika nufassihul Aayaati liqawminy ya'lamoon

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?" என்று கேட்டு "அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது" என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنَّمَا
எல்லாம்
حَرَّمَ
தடைசெய்தான்
رَبِّىَ
என் இறைவன்
ٱلْفَوَٰحِشَ
மானக்கேடான காரியங்கள்
مَا ظَهَرَ
எது/வெளிப்படையாக இருக்கிறது
مِنْهَا
அவற்றில்
وَمَا
இன்னும் எது
بَطَنَ
மறைவாகஇருக்கிறது
وَٱلْإِثْمَ
இன்னும் பாவத்தை
وَٱلْبَغْىَ
இன்னும் கொடுமைப்படுத்துவது
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
وَأَن تُشْرِكُوا۟
இன்னும் நீங்கள் இணையாக்குவதை
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
مَا لَمْ
எதை/அவன் இறக்கவில்லை/அதற்கு
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
وَأَن تَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதை
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எவற்றை
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Qul innamaa harrama Rabbiyal fawaahisha maa zahara minhaa wa maa bataa wal isma walbaghya bighairil haqqi wa an tushrikoo billaahi maa lam yunazzil bihee sultaananw wa an taqooloo 'alal laahi maa laa ta'lamoon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், யாதொரு ஆதாரமும் இல்லாதிருக்கும் போதே அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்.

Tafseer

وَلِكُلِّ
எல்லோருக்கும்
أُمَّةٍ
இனத்தவர்
أَجَلٌۖ
ஒரு தவணை
فَإِذَا جَآءَ
வந்தால்
أَجَلُهُمْ
அவர்களுடைய தவணை
لَا يَسْتَأْخِرُونَ
பிந்த மாட்டார்கள்
سَاعَةًۖ
ஒரு வினாடி
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்

Wa likulli ummatin ajalun fa izaa jaaa'a ajaluhum laa yastaakhiroona saa'atanw wa laa yastaqdimoon

ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

Tafseer

يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் சந்ததிகளே
إِمَّا يَأْتِيَنَّكُمْ
நிச்சயமாக வந்தால்/உங்களிடம்
رُسُلٌ
தூதர்கள்
مِّنكُمْ
உங்களில் இருந்தே
يَقُصُّونَ
விவரித்தவர்களாக
عَلَيْكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِىۙ
என் வசனங்களை
فَمَنِ
எவர்(கள்)
ٱتَّقَىٰ
அஞ்சினார்(கள்)
وَأَصْلَحَ
இன்னும் சீர்திருத்தினார்(கள்)
فَلَا خَوْفٌ
பயமில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

yaa Banee Aadama immaa yaatiyannakum Rusulum minkum yaqussoona 'alaikum Aayaatee famanit taqaa wa aslaha falaa khawfun 'alaihim wa laa hum yahzanoon

ஆதமுடைய மக்களே! (என்னுடைய) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என்னுடைய வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்து புறக்கணித்தனர்
عَنْهَآ
அவற்றை விட்டு
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wallazeena kazzaboo bi Aayaatinaa wastakbaroo 'anhhaaa ulaaa'ika Ashaabun naari hum feehaa khaalidoon

(எனினும்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.

Tafseer

فَمَنْ أَظْلَمُ
யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
مِمَّنِ
எவனைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை
أَوْ
அல்லது
كَذَّبَ
பொய்ப்பித்தான்
بِـَٔايَٰتِهِۦٓۚ
அவனுடைய வசனங்களை
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
يَنَالُهُمْ
அடையும்/இவர்களை
نَصِيبُهُم
பாகம்/இவர்களுடைய
مِّنَ ٱلْكِتَٰبِۖ
விதியில்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءَتْهُمْ
வந்தால்/இவர்களிடம்
رُسُلُنَا
நம் தூதர்கள்
يَتَوَفَّوْنَهُمْ
உயிர்வாங்குபவர்களாக/இவர்களை
قَالُوٓا۟
கூறுவார்கள்
أَيْنَ
எங்கே?
مَا كُنتُمْ
எவை/இருந்தீர்கள்
تَدْعُونَ
பிரார்த்திப்பீர்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
قَالُوا۟
கூறினார்கள்
ضَلُّوا۟
மறைந்தனர்
عَنَّا
எங்களை விட்டு
وَشَهِدُوا۟
இன்னும் சாட்சியளிப்பார்கள்
عَلَىٰٓ
எதிராக
أَنفُسِهِمْ
தங்களுக்கு
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
كَانُوا۟
இருந்தனர்
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Faman azlamu mimmanif taraa 'alal laahi kaziban aw kazzaba bi Aayaatih; ulaaa'ika yanaaluhum naseebuhum minal Kitaab; hataaa izaa jaaa'at hum rusulunaa yatawaf fawnahum qaalooo aina maa kuntum tad'oonaa min doonil laahi qaaloo dalloo 'annaa wa shahidoo 'alaaa anfusihim annahum kaanoo kaafieen

எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரையில்) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம்முடைய மலக்குகள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் "கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் "(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன" என்று கூறி மெய்யாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்ததாகவும், தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.

Tafseer

قَالَ
கூறுவான்
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
فِىٓ أُمَمٍ
கூட்டங்களில்
قَدْ خَلَتْ
சென்றுவிட்டன
مِن قَبْلِكُم
உங்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
وَٱلْإِنسِ
இன்னும் மனிதர்களில்
فِى ٱلنَّارِۖ
நரகத்தில்
كُلَّمَا
எல்லாம்
دَخَلَتْ
நுழைந்தது
أُمَّةٌ
ஒரு கூட்டம்
لَّعَنَتْ
சபிக்கும்
أُخْتَهَاۖ
தன் சக கூட்டத்தை
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا ٱدَّارَكُوا۟
அவர்கள் ஒன்றுசேர்ந்தால்
فِيهَا
அதில்
جَمِيعًا
அனைவரும்
قَالَتْ
கூறும்
أُخْرَىٰهُمْ
அவர்களில் பின் வந்த கூட்டம்
لِأُولَىٰهُمْ
தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து
رَبَّنَا
எங்கள் இறைவா
هَٰٓؤُلَآءِ
இவர்கள்தான்
أَضَلُّونَا
வழி கெடுத்தனர்/எங்களை
فَـَٔاتِهِمْ
எனவே கொடு/அவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
ضِعْفًا
இரு மடங்கு
مِّنَ ٱلنَّارِۖ
நரகில்
قَالَ
கூறுவான்
لِكُلٍّ
எல்லோருக்கும்
ضِعْفٌ
இரு மடங்கு
وَلَٰكِن
எனினும்
لَّا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Qaalad khuloo feee umamin qad khalat min qablikum minal jinni wal insifin naari kullamaa dakhalat ummatul la'anat ukhtahaa hattaaa izad daarakoo feehaa jamee'an qaalat ukhraahum li oolaahum Rabbannaa haaa'u laaa'i adalloonaa fa aatihim 'azaaban di'fam minan naari qaala likullin di funw wa laakil laa ta'lamoon

(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்" என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர் (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர் களைச் சுட்டிக் காட்டி "எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களை விட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார்கள். அதற்கு அவன் "உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறுவான்.

Tafseer

وَقَالَتْ أُولَىٰهُمْ
இன்னும் கூறும்/அவர்களில் முன்சென்ற கூட்டம்
لِأُخْرَىٰهُمْ
அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு
فَمَا كَانَ
உங்களுக்கு இல்லை
عَلَيْنَا
எங்களை விட
مِن فَضْلٍ
ஒரு மேன்மை
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
بِمَا
எதன் காரணமாக
كُنتُمْ
இருந்தீர்கள்
تَكْسِبُونَ
செய்வீர்கள்

Wa qaalat oolaahum li ukhraahum famaa kaana lakum 'alainaa min fadlin fazooqul azaaba bimaa kuntum taksiboon

அவர்களில் முன் சென்றவர்கள் பின் சென்றவர்களை நோக்கி "எங்களை விட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்" என்று கூறுவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்
عَنْهَا
அவற்றை விட்டு
لَا تُفَتَّحُ
திறக்கப்படாது
لَهُمْ
அவர்களுக்கு
أَبْوَٰبُ
வாசல்கள்
ٱلسَّمَآءِ
வானத்தின்
وَلَا يَدْخُلُونَ
இன்னும் நுழைய மாட்டார்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
حَتَّىٰ يَلِجَ
நுழையும் வரை
ٱلْجَمَلُ
ஒட்டகம்
فِى سَمِّ
காதில்
ٱلْخِيَاطِۚ
ஊசியின்
وَكَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு

Innal lazeena kazzaboo bi Aayaatinaa wastakbaroo 'anhaa laa tufattahu lahum ahwaabus samaaa'i wa laa yadkhuloonal jannata hattaa yalijal jamalu fee sammil khiyaat; wa kazaalika najzil mujrimeen

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.

Tafseer