Skip to main content

وَعَنَتِ
பணிந்து விட்டன
ٱلْوُجُوهُ
முகங்கள்
لِلْحَىِّ
என்றும் உயிருள்ளவன்
ٱلْقَيُّومِۖ
என்றும் நிலையானவன்
وَقَدْ
திட்டமாக
خَابَ
நஷ்டமடைந்தான்
مَنْ حَمَلَ
சுமந்தவன்
ظُلْمًا
அநியாயத்தை

Wa 'anatil wujoohu lil Haiiyil Qaiyoomi wa qad khaaba man hamala zulmaa

(அந்நாளில்) நிரந்தரமானவனும் நிலையானவனுமாகிய (இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்துகொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.

Tafseer

وَمَن
யார்
يَعْمَلْ
செய்வாரோ
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
وَهُوَ
அவரோ இருக்க
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
فَلَا يَخَافُ
பயப்பட மாட்டார்
ظُلْمًا
அநியாயத்தை
وَلَا هَضْمًا
இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை

Wa mai ya'mal minas saalihaati wa huwa mu'minun falaa yakhaafu zulmanw wa laa hadmaa

எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன்னுடைய நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
قُرْءَانًا
குர்ஆனாக
عَرَبِيًّا
அரபி மொழியிலான
وَصَرَّفْنَا فِيهِ
நாம் விவரித்து இருக்கிறோம்/அதில்
مِنَ ٱلْوَعِيدِ
எச்சரிக்கையை பலவாறாக
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக
أَوْ
அல்லது
يُحْدِثُ
அது ஏற்படுத்துவதற்காக
لَهُمْ
அவர்களுக்கு
ذِكْرًا
ஓர் அறிவுரையை

Wa kazaalika anzalnaahu Qur-aanan 'Arabiyyanw wa sarrafnaa fee hi minal wa'eedi la'allahum yattaqoona aw yuhdisu lahum zikraa

இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். அவர்களுக்கு நல்லுணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக்கொள்ளும் பொருட்டு இதில் நாம் (நம்முடைய) வேதனையைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.

Tafseer

فَتَعَٰلَى
மிக உயர்ந்தவன்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمَلِكُ
அரசனாகிய
ٱلْحَقُّۗ
உண்மையாளனாகிய
وَلَا تَعْجَلْ
அவசரப்படாதீர்
بِٱلْقُرْءَانِ
குர்ஆனில்
مِن قَبْلِ
முன்னர்
أَن يُقْضَىٰٓ
முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு
إِلَيْكَ
உமக்கு
وَحْيُهُۥۖ
அதனுடைய வஹீ
وَقُل
இன்னும் கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
زِدْنِى
எனக்குஅதிகப்படுத்து
عِلْمًا
ஞானத்தை

Fata'aalal laahul Malikul Haqq; wa laa ta'jal bil Quraani min qabli ai yuqdaaa ilaika wahyuhoo wa qur Rabbi zidnee 'ilmaa

உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக்க உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உங்களுக்கு வஹீ அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதனை ஓத) நீங்கள் அவசரப்படாதீர்கள். எனினும் "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

Tafseer

وَلَقَدْ عَهِدْنَآ
திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம்
إِلَىٰٓ ءَادَمَ
ஆதமுக்கு
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
فَنَسِىَ
மறந்து விட்டார்
وَلَمْ نَجِدْ
நாம் காணவில்லை
لَهُۥ
அவரிடம்
عَزْمًا
உறுதியை

Wa laqad 'ahidnaaa ilaaa Aadama min qablu fanasiya wa lam najid lahoo 'azmaa

இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதனை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக) அதற்கு மாறு செய்யும் எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.

Tafseer

وَإِذْ
சமயத்தை
قُلْنَا
நாம் கூறிய
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ٱسْجُدُوا۟
நீங்கள் சிரம் தாழ்த்துங்கள்
لِءَادَمَ
ஆதமுக்கு
فَسَجَدُوٓا۟
அவர்கள் சிரம் தாழ்த்தினர்
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
أَبَىٰ
மறுத்து விட்டான்

Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Iblees; abaa

மலக்குகளை நோக்கி "நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.

Tafseer

فَقُلْنَا
ஆகவே நாம் கூறினோம்
يَٰٓـَٔادَمُ
ஆதமே
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இவன்
عَدُوٌّ
எதிரி
لَّكَ
உமக்கு
وَلِزَوْجِكَ
இன்னும் உமது மனைவிக்கு
فَلَا يُخْرِجَنَّكُمَا
ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்
مِنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்திலிருந்து
فَتَشْقَىٰٓ
நீர்சிரமப்பட்டுவிடுவீர்

Faqulnaa yaaa Aadamu inna haazaa 'aduwwul laka wa lizawjika falaa yukhrijan nakumaa minal Jannati fatashqaa

(ஆதலால், நாம் ஆதமை நோக்கி) "ஆதமே! நிச்சயமாக இவன் உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப் படுத்திவிடாது நீங்கள் (எச்சரிக்கையாக) இருங்கள். இன்றேல் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள்" என்று கூறினோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
لَكَ
உமக்கு
أَلَّا تَجُوعَ
நீர் பசித்திருக்காத
فِيهَا
அதில்
وَلَا تَعْرَىٰ
இன்னும் ஆடையற்றிருக்காத

Innaa laka allaa tajoo'a feeha wa laa ta'raa

"நிச்சயமாக நீங்கள் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்.

Tafseer

وَأَنَّكَ
இன்னும் நிச்சயமாக நீர்
لَا تَظْمَؤُا۟
அதில்தர்கிக்கமாட்டீர்
وَلَا تَضْحَىٰ
இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்

Wa annaka laa tazma'u feehaa wa laa tadhaa

நிச்சயமாக நீங்கள் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்கள்" என்று கூறினான்.

Tafseer

فَوَسْوَسَ
ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்
إِلَيْهِ
அவருக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
قَالَ
கூறினான்
يَٰٓـَٔادَمُ
ஆதமே
هَلْ أَدُلُّكَ
நான் உமக்கு அறிவிக்கவா?
عَلَىٰ شَجَرَةِ
மரத்தையும்
ٱلْخُلْدِ
நிரந்தரத்தின்
وَمُلْكٍ
ஆட்சியையும்
لَّا يَبْلَىٰ
அழியாத

Fa waswasa ilaihish Shaitaanu qaala yaaa Aadamu hal adulluka 'alaa shajaratil khuldi wa mulkil laa yablaa

எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி "ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினான்.

Tafseer